darbar
  • January
    23
    Thursday

Main Area

Main



ஆந்திராவின் பேவரைட் பெசரட்டு... செய்யறது ரொம்ப ஈஸி...

 பெசரட்டு
பெசரட்டு

தேவையான பொருட்கள்
பச்சைப்பயிறு        -150கி
பச்சரிசி            -50கி
பச்சை மிளகாய்    -2
இஞ்சி            - சிறு துண்டு
கறிவேப்பிலை        -10 இலைகள்
கொத்தமல்லி        -1கொத்து
சீரகம்            -1டீஸ்பூன்
சி.வெங்காயம்        -100கி
உப்பு            -தேவையான அளவு
எண்ணெய்        -தேவையான அளவு

dhosa

செய்முறை
பச்சைப்பயிறு மற்றும் பச்சரிசியை நன்றாக கழுவி, ஒன்றாக சேர்த்து நான்கு  மணி நேரம் ஊறவைக்க வேண்டும். நன்றாக ஊறிய பின்பு மிக்ஸி அல்லது கிரைண்டரில் பயிறு, பச்சரிசி முதலில் சேர்த்து பாதி அரைத்த பதம் வந்தவுடன் இதனுடன் இஞ்சி,பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து நைசாக அரைக்க வேண்டும். அரைத்த மாவுடன் சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு வந்தவுடன் மெல்லிய தோசைகளாக வார்த்தெடுக்க வேண்டும். இந்த கலவையிலான மாவைப் புளிக்க வைக்க தேவையில்லை. அரைத்த உடனேயே தோசை சுடலாம். தேங்காய் சட்னி அட்டகாசமான சைட்டிஷ். இந்த பெசரட்டு ஆந்திராவில் மிகவும் பிரபலமான ரெசிபி. முழு பச்சைப் பயிறு பயன்படுத்திச் செய்வதால் மிகவும் சத்து நிறைந்தது

2018 TopTamilNews. All rights reserved.