பெண் கொடுக்க மறுத்த அத்தை குடும்பத்தை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய இளைஞர்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainபெண் கொடுக்க மறுத்த அத்தை குடும்பத்தை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய இளைஞர்!

கொலை
கொலை

ஆந்திராவில் ஒருதலையாக காதலித்த அத்தை மகளுடன் திருமணம் செய்துவைக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் அவரது அத்தையை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கிழக்கு கோதாவரி மாவட்டம் கடியம் மண்டலம் துல்லா கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். அதே பகுதியிலுள்ள அவரது அத்தை சத்தியவதியின் மகளை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார் ஸ்ரீனிவாஸ்.  மகளை திருமணம் செய்துவைக்குமாறு அத்தையிடம் கடந்த ஆறு மாதமாக ஸ்ரீனிவாஸ் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஸ்ரீனிவாஸ் நடவடிக்கை மற்றும் பழக்கவழக்கம் பிடிக்காததால் தனது மகளுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்துவைத்தார் சத்தியவதி. மேலும் ஸ்ரீனிவாசல் பிரச்னை ஏற்படக்கூடாது என்பதற்காக அவர் மீது போலீசில் புகாரும் கொடுத்துள்ளார். 

fire

இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீனிவாஸ், சத்தியவதி வீட்டிற்கு நள்ளிரவில் சென்று அவரை வீட்டுடன் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இதில் வீட்டில் தூக்கிக்கொண்டிருந்த நான்கு பேர் சிக்கிக்கொண்டனர். இந்த சம்பவத்தில் சத்தியவதியின் மகன் மற்றும் மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சத்தியவதி உட்பட  இருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

2018 TopTamilNews. All rights reserved.