• December
    15
    Sunday

Main Area

Main



என் வாழ்க்கையின் ஒளி இவன்... குழந்தையின் புதிய புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்! 

amy jackson with baby
amy jackson with baby

நடிகை எமி ஜாக்சன் தனது குழந்தையின் புதிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

தமிழில் மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானவர்  லண்டன் நடிகையான எமி ஜாக்சன். இதையடுத்து அவரது நடிப்பில் வெளியான தாண்டவம், ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார்.  ஜார்ஜ் பெனாய்டோ என்பவரை திருமணம் செய்துகொள்ள போவதாக கூறி நிச்சயம் செய்துகொண்ட எமி ஜாக்சன் திருமணம் செய்துகொள்வதற்கு முன்னரே,  கர்ப்பமானார். இது திரையுலகினர் மத்தியில் பூகம்பத்தைக் கிளப்பியது.  இதற்கிடையில் கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆண்ட்ரியாஸ் ஜேக்ஸ் பனாயோது என அந்த குழந்தைக்கு பெயரிட்டுள்ள எமி, அவ்வப்போது குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்துவருகிறார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Light of my life ❤️

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

 

இந்நிலையில் தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், குழந்தையின் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, என் வாழ்க்கையின் ஒளி நீ என பதிவிட்டுள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.