darbar
  • January
    23
    Thursday

Main Area

Main



கர்ப்ப காலத்தில் ஃபிட்டாக இருப்பது எப்படி? சீக்ரெட் சொன்ன எமி ஜாக்சன்

எமி ஜாக்சன்
எமி ஜாக்சன்

நடிகை எமி ஜாக்சன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதைத்தொடர்ந்து விக்ரம், விஜய், உதயநிதி, தனுஷ் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில் ரஜினிகாந்த்தின் 2.0 திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார். 

இவர் கடந்த ஜனவரி மாதம் தொழிலதிபர் ஜார்ஜ் பனையோத்துவை காதலிப்பதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து மார்ச் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார். திருமணத்துக்கு முன்பு கர்ப்பமானதால் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் எமி தனது கர்ப்ப கால புகைப்படங்களை வெளியிட்டு தன்னை எப்போதும் குஷியாகி வைத்துள்ளார்.  

இந்நிலையில் தற்போது ஒரு புதிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கர்ப்ப காலத்தில் அவர் எவ்வாறு ஆரோக்கியமாக இருக்கிறார் என்ற சீக்ரெட் பற்றி கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ' கர்ப்பமடைவதற்கு முன்பே உடற் பயிற்சியில் நான் அதிகமாக ஈடுபடுவேன். அதுமட்டுமின்றி யோகா செய்வதன் மூலம் மன அழுத்தம் நீங்கிவிடும். கர்ப்ப காலத்தில் நீங்களும் இது போல் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்' என்று   பதிவிட்டுள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.