darbar
  • January
    28
    Tuesday

Main Area

Main



அழகான ஆண்குழந்தைக்கு அம்மாவானார் நடிகை எமி ஜாக்சன்! புகைப்படங்கள் இதோ!

எமி ஜாக்சன்
எமி ஜாக்சன்

அறுபது எழுபது படங்களில் நடித்திருந்தாலும் சில நடிகைகளின் திரையுலக வாழ்க்கை, திருமணத்திற்கு பிறகு சொல்லிக் கொள்கிற மாதிரி அமைவது அபூர்வம். வெளிநாட்டு பெண்ணாக இருந்தாலும் இந்திய சினிமாவில் நுழைந்து பல ரசிகர்களைக் கொண்டிருக்கும் எமி ஜாக்சன் நடித்த அத்தனைத் தமிழ் படங்களுமே அவருக்கு பெயர் சொல்கிற மாதிரியாக தான் அமைந்திருக்கின்றன. ஆர்யாவுடன் நடித்த ‘மதராசப்பட்டினம்’ படத்தை அத்தனை சீக்கிரத்தில் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். முதல் படமே ஹிட் கொடுக்க, சூப்பர் ஸ்டார் ரஜினி வரையிலும் நடித்தார். பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் படத்தில் நடித்ததன் மூலமாக உலகம் முழுவதுமே பிரபலமானார். அதன் பிறகு தமிழ் மட்டுமல்லாமல், இந்தி சினிமாவிலும் நடித்த எமி ஜாக்சன், தன்னுடைய நீண்ட நாள் காதலரை சோஷியல் மீடியாக்களின் அறிமுகப்படுத்தினார்.

emy jackson

யார் என்ன சொன்னாலும், கவலையே படாமல் லிவிங் டூ கெதர் வாழ்க்கை நடத்தி வரும் நயன்தாரா, நிச்சயதார்த்தத்துடன் முறிந்து போன திருமணத்தைப் பற்றி பேசாமல் இன்னமும் கனவு கன்னியாகவே காலம் தள்ளும் த்ரிஷா போன்ற நடிகைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டவராக எமி ஜாக்சன், திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதையும் ரசிகர்களிடையே மறைக்காமல், தைரியமாக தன்னுடைய இன்ஸ்ட்ரா பக்கத்தில் புகைப்படங்களுடன் வெளியிட்டார். கர்ப்பமடைந்த பிறகு தன் காதலரைத் திருமணம் செய்துக் கொண்டு, ஒவ்வொரு இடைவெளியிலும் தாய்மையை முழுமையாக அனுபவித்து, புகைப்படங்களை வெளியிட்டு, தாய்மையை தன் அபிமான ரசிகர்களுடன் கொண்டாடவும் செய்தார்.
இந்நிலையில், இன்று நடிகை எமி ஜாக்சனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் எனப் பெயரிட்டிருக்கிறார்கள். ஆண்ட்ரியாஸ் என்றால், பெருங்கடலின் புதல்வன் என்று அர்த்தம்!

amy jackson

குழந்தைப் பிறந்தவுடன், எந்த பந்தாவும் செய்யாமல், தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் பார்வைக்கு பகிர்ந்திருக்கிறார். எமி ஜாக்சனின் இந்த செயலை ரசிகர்கள் பாராட்டி, தாய்க்கும் குழந்தைக்கும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

2018 TopTamilNews. All rights reserved.