• October
    14
    Monday

Main Area

Main



’பதவியும், பணமும்தான்யா முக்கியம்...’ ’எம்டி பாக்ஸான ‘டி.டி.வி.,க்கு பாடம் புகட்டிய அமமுக நிர்வாகிகள்..!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கட்சியை பிடிப்போம்... ஆட்சியை கவிழ்ப்போம் என்றெல்லாம் வீராப்பு காட்டிய டி.டி.வி.தினகரன் அணி தேர்தல் முடிவுகளுக்கு பிறகு வெடவெடத்துக் கிடக்கிறது. அதிமுகவிலிருந்து பிரிந்து அமமுக ஆரம்பித்த போது அதிமுக நிர்வாகிகள் டி.டி.வி.அணிக்கு தாவி எடப்பாடி அணிக்கு கிலியை ஏற்படுத்தியது போய் இப்போது அமமுகவிலிருந்து கொத்துக் கொத்தாய் நிர்வாகிகள்  விலகி டி.டி.வியை கலங்கடித்து வருகின்றனர். ammk

தேர்தல் ரிசல்டை அடுத்து, ‘இந்தக் கட்சி தோற்றுப்  போனதால் முடங்கிவிடாது’ என்றார். ’அமமுகவில் இருந்து வெளியேற விரும்புவோர் வெளியேறலாம்’ என மீசையில் ஒட்டிய மண்ணை துடைத்தபடி டி.டி.வி. கூறினார். 

வீட்டை விட்டு வெளியேறச்சொன்னால் சும்மா இருக்க அவர்கள் என்ன பிடித்து வைத்த பிள்ளையாரா? பதவி பசை தேடி  நிர்வாகிகள் புற்றீசலில் இருந்து ஈசலாய் கிளம்பி கொத்துக் கொத்தாய் அதிமுகவில் இணைந்து வருகிறார்கள் நிர்வாகிகள். தேர்தல் ரிசல்ட் வந்த மறுநாளே அமமுக  அமைப்பு செயலாளரும் திருநெல்வேலி  புறநகர் மாவட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணாமலை அதிமுகவில் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். ammk

அடுத்தடுத்து நிர்வாகிகள் படையெடுக்க இன்று மட்டும் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்களது ஆதரவாளர்களுடன் அணி சாய்ந்து விட்டனர்.  நெல்லை தொகுதியில் அமமுக வேட்பாளராக போட்டியிட்ட மைக்கேல் ராயப்பன் உள்ளிட்ட 15 பேர் இன்று அமமுகவில் இருந்து விலகி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தனர். தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அமமுக கட்சியிலிருந்து விலகிய நிர்வாகிகள் நேரில் எடப்பாடியிடம் வந்து சரணாகதி அடைந்துள்ளனர். ops

 தேனி மாவட்ட அமமுக கட்சியைச் சேர்ந்த கூடலூர் நகர வார்டு செயலாளர்கள், துணை செயலாளர்கள் மற்றும் நகர இளைஞர் அணி செயலாளர் ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி தாய்க்கழகமான அஇஅதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அமமுக கட்சியிலிருந்து விலகிய நிர்வாகிகள் நேரில் சந்தித்து அதிமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர். ops

தங்க தமிழ்செல்வனும் அதிமுகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி  வருவதாகக் கூறப்படுகிறது. இதே நிலை நீடித்தால் டி.டி.வி.தினகரன் மட்டுமல்ல... அதிமுக அமைச்சர்களை அடிமையாக வைத்திருந்த சசிகலா குடும்பமே அரசியலை விட்டு ஒதுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.