• August
    25
    Sunday

Main Area

Main



முடிஞ்சா கைது பண்ணுங்க மம்தா...! சவால்விடும் அமித்ஷா!!

amitshah
amitshah
Loading...

நான் ஜெய் ஸ்ரீராம் என்று முழங்குவேன். துணிச்சல் இருந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என மம்தா பானர்ஜிக்கு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா சவால் விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இறுதிகட்ட காரசார பிரசாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். அதிலும் மேற்குவந்த மாநிலத்தில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடுமையான வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடியும் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர்.

இந்நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்துக்காக ஜாதவ்பூர் பகுதியில் பாஜக தலைவர் அமித் ஷாவின் மிக பிரமாண்டமான பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பேரணிக்கு அனுமதி அளிக்கவும், அமிஷ்ச்கா ஜாதவ்பூர் வரவும் காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர். இந்நிலையில் ஜாய்நகர் பகுதியில் நடைபெற்ற மற்றொரு பிரசாரக்கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய அவர்,  “மம்தாவின் மருமகன் போட்டியிடும் தொகுதியில் நான் பிரசாரம் மேற்கொண்டால் அவர்கள் கண்டிப்பாக தோற்றுவிடுவர். அந்த தோல்வி பயத்தில்தான் அவர்கள் எங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. பிரசாரத்திற்கு தடை விதிக்கலாம். ஆனால் எங்களின் வெற்றிக்கு தடை விதிக்க முடியாது. பிரதமர் மோடி பிரபலமாகிவிடக்கூடாது என்ற நோக்கத்தில் மம்தா செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். இந்த மாநிலத்தில் ஜெய் ஸ்ரீ ராம் என சொன்னால் சிறையில் அடைத்து விடுகின்றனர். நான் மேடையிலேயே ஜெய் ஸ்ரீ ராம் என உரக்க சொல்வேன். முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்” என மம்தாவுக்கு சவால் விடுத்தார். 

2018 TopTamilNews. All rights reserved.