• October
    14
    Monday

Main Area

Main



சிவாஜி தான் மாஸ்டர்; நாமெல்லாம் சிஷ்யர்கள்! நடிகர் திலகம் பற்றி அமிதாப் பச்சன்!?

அமிதா பச்சன்
அமிதா பச்சன்

சென்னை: நடிகர் சிவாஜியை புகழ்ந்து பாலிவுட் நடிகர் அமிதா பச்சன் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். 

தமிழ்வாணன் இயக்கத்தில் அமிதாப்பச்சன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்துவரும் திரைப்படம் 'உயர்ந்த மனிதன். தமிழ் மற்றும் இந்தி என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங்கில் எஸ்.ஜே.சூர்யா அவ்வப்போது அமிதாப்பச்சனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைத் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் அமிதாப்பச்சன் சிவாஜி கணேசனின் புகைப்படத்தின் கீழ் எஸ்ஜே சூர்யாவுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து  'குருவின் நிழலில் இரண்டு சீடர்கள் நானும், சூர்யாவும். சிவாஜி தமிழ் சினிமாவின் மறுக்க முடியாத ஒரு அடையாளம். அவருடைய புகைப்படம் இந்த சுவற்றை அலங்கரிக்கிறது. நான் மரியாதையுடன் அவர் காலை தொட்டேன் என்றார்.  

sjsurya

பின், அவர் மாஸ்டர்... நாம் அவருடைய சீடர்கள்' என்று தமிழில் பதிவு செய்துள்ளார். 

இதையும் படிங்க: வரம்புமீறிய விக்னேஷ் சிவன்: வழக்கு கொடுத்த இயக்குநர்!?

2018 TopTamilNews. All rights reserved.