• August
    21
    Wednesday

Main Area

Main



மருத்துவமனையில் இருந்து அமித்ஷா டிஸ்சார்ஜ்

amithshaa
amithshaa
Loading...

புதுதில்லி: எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து பாஜக தேசிய தலைவர் அமித்ஷா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் கடந்த 16-ம் தேதி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்து பார்த்ததில் அவருக்கு பன்றி காய்ச்சல் தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால் அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதுகுறித்து, பாஜக மாநிலங்களவை உறுப்பினரும், ஊடகப் பிரிவுத் தலைவருமான அனில் பலூனி கூறுகையில், பன்றிக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் பூரண உடல் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார். அமித் ஷாவுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

2018 TopTamilNews. All rights reserved.