kaappan-mobile kaappan-large
  • September
    18
    Wednesday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


பார்த்திபனுக்கு வாழ்த்து கூறிய பிரபல பாலிவுட் நடிகர் 

நடிகர் பார்த்திபன்
நடிகர் பார்த்திபன்
Loading...

சென்னை: பார்த்திபன் இயக்கி, நடித்திருக்கும் ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் வாழ்த்து கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். 

நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஷங்கர், லிங்குசாமி, கே.பாக்யராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடியோ மூலம் தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து, தற்போது பிரபல பாலிவுட் டாப் நடிகரான அமீர்கான், பார்த்திபன் இயக்கி, நடித்திருக்கும் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ திரைப்படத்திற்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்து கூறி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த காணொளியைப் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அதில், ‘ஹாய் பார்த்திபன்.. உங்களுக்கும், ஒத்த செருப்பு பட குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள். ஒரே ஒரு கதாபாத்திரத்தை வைத்து உருவான படம் என என்னிடம் கூறினீர்கள், இதுவரை இல்லாத புதிய விஷயமாக தெரிகிறது. இப்படம் ரசிகர்களின் அன்பையும், ஆதரவையும் பெற்று பெரிய வெற்றி அடைய வேண்டும் என்று எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என பேசியுள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.