kaappan-mobile kaappan-large
  • September
    19
    Thursday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


மீண்டும் பிரதமரான மோடி: அமெரிக்காவில் பண மழையால் வெற்றியை கொண்டாடிய ரசிகர்கள்! வைரல் வீடியோ!

அமெரிக்கா
அமெரிக்கா
Loading...

நியூயார்க் : மீண்டும் நரேந்திர மோடி பிரதமராவதை அமெரிக்க வாழ் இந்தியர்கள் கொண்டாடியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. 

மக்களவை தேர்தல் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. இதனால் பெரும்பான்மையுடன் மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார். இதனால் பாஜக தொண்டர்கள் உற்சாகத்தில் திளைத்துள்ளனர். 

modi

இதையடுத்து தேர்தல் வெற்றிக்காக பல நாடுகளின் தலைவர்களும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், ஆஸ்திரேலிய பிரதமர், இஸ்ரேல் பிரதமர், பிரான்ஸ் அதிபர், மாலத்தீவு அதிபர், இலங்கை பிரதமர், மொரீஷியஸ் பிரதமர் ஆகியோர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வாழ்த்து கூறினர். அதே போல் அமெரிக்க அதிபர்  டொனால்டு டிரம்ப் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது, அமெரிக்க-இந்திய நட்புறவில் மிகப்பெரும் விஷயம் என்று தெரிவித்தார். 

 

இந்நிலையில் அமெரிக்காவில் உச்சக்கட்டமாக பாஜகவின் அமோக வெற்றியால் மோடி இரண்டாவது முறையாகப் பிரதமராகி இருப்பதற்குப் பண மழையைப் பொழிந்துள்ளனர். நியூயார்க் நகரின் 42 வது  தெருவில் நடந்த  இந்த கொண்டாட்டத்தில் ரூபாய் நோட்டுகளைச் சாலையில் வீசி வெற்றியைக் கொண்டாடியுள்ளனர். பொதுவாகவே அடிக்கடி வெளிநாடுகளுக்கு விசிட் அடிக்கும் மோடிக்கு அங்கு ரசிகர்கள்  கூட்டம் ஏராளம். இதில் ஒரு பகுதியினரே  இந்த வெற்றியை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில்  வேகமாகப் பரவி வருகிறது. 

2018 TopTamilNews. All rights reserved.