• February
    28
    Friday

Main Area

Main



உணவு டெலிவரியிலும் கால்பதிக்கிறது அமேசான்! வாரி வழங்கும் சலுகைகள்!

அமேசான்
அமேசான்

உள்ளங்கைக்குள் உலகம் என்பது யாருக்கு சரியாக பொருந்துகிறதோ இல்லையோ இந்தியர்களுக்கு கனகச்சிதமாக பொருந்தியிருக்கிறது. திரும்புகிற இடங்களில் எல்லாம் உணவகங்களாக பெருகிவிட்டிருந்தாலும், தங்களுக்குப் பிடித்த உணவகத்தில் இருந்தூ, விருப்பமான மொபைல் ஆப்கள் வழியாக ஆர்டர் செய்து உணவை ருசிப் பார்ப்பதில் இந்தியர்கள் தான் உலகளவில் முதலிடத்தில் இருக்கிறார்கள்.தினமும் 10 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்களுக்கு உணவை ஆன் லைன் மூலம் ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர்.

amazon

தவிர, இந்தியாவின் ஜனத்தொகையும் பல வெளிநாட்டு நிறுவனங்களை இத்துறையில் முதலீடு செய்ய ஈர்த்து வருகிறது. இந்நிலையில்,  ஆன்லைன் வர்த்தகத்தில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் நிறுவனமான அமேசான் அடுத்த மாதம் உணவு டெலிவரி வர்த்தகத்தில் கால் பதிக்கத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே முன்னணியில் பல நிறுவனங்கள் இத்துறையில் இருப்பதால், பல புதிய சலுகைகளை பயனாளர்களுக்கு வாரி வழங்கவும் திட்டமிட்டிருக்கிறது அமேசான்.

உலக அளவில், உணவு டெலிவரி வர்த்தகத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டே அமேசான் நிறுவனம் கால்பதித்தது. ஆனால், இலக்கை அடைய முடியாததால், அந்த வர்த்தகப் பிரிவு கடந்த ஜூன் மாதத்தில் மூடப்பட்டது. பின்னர், உணவு டெலிவரி வர்த்தகத்தில் ஈடுபட்ட புதிய ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றில் அமேசான் முதலீடு செய்தது.

amazon

இந்தியாவில் உள்ள பல ஆன்லைன் உணவு நிறுவனங்கள் சமீப காலங்களில் அதிக விமர்சனங்களை சந்தித்து வருவதால், தற்போது, புதிய நிறுவனம் தொடங்கப்பட சிறந்த காலகட்டமாகப் பார்க்கப்படுகிறது. கடந்த காலத்தின் பாடங்களையும், நிகழ்காலத்தின் தேவைகளையும் மனதில் கொண்டே அமேசானின் இரண்டாம் வருகை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

2018 TopTamilNews. All rights reserved.