• February
    26
    Wednesday

Main Area

Main



செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தடை செய்ய வேண்டும் -  சுந்தர் பிச்சை

 சுந்தர் பிச்சை
சுந்தர் பிச்சை

பேசியல் ரெக்கெக்னிஷன் தொழில்நுட்பத்தை தடை செய்யும் முடிவுக்கு கூகுள் மற்றும் அல்ஃபபெட் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆதரவு தெரிவித்துள்ளார். 

நாளிதழ் ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையில், தானியங்கி கார், மருத்துவம் சார்ந்த நுண்ணறிவு தொழில்நுட்பங்களுக்கு விதிகள் வகுக்கப்பட வேண்டும் என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார். இது மிகவும் முக்கியம் என்றும் அதே நேரத்தில், கட்டாயப்படுத்தாமல் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Facial - Recognition

இம்மாத தொடக்கத்தில் அமெரிக்க வெள்ளை மாளிகை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முறைப்படுத்துவதற்கான கொள்கைகளை வகுத்தது. மேலும், தேவையற்ற தொழில்நுட்பங்களை தவிர்க்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளை வலியுறுத்தியது. இதனையடுத்து முகத்தை அடையாளம் காணும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்ய பரிசீலித்து வருவதாக கடந்த வாரம் ஐரோப்பிய ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில் கூகுள் மற்றும் அல்ஃபபெட் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகவும் நன்மை தரக்கூடியது என்றும், அதே நேரத்தில் அதனை தவறான வழியில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.  
 

2018 TopTamilNews. All rights reserved.