• August
    26
    Monday

Main Area

Main



ஏர்போர்ட்டில் ராஜமவுலியிடம் வாய்ப்பு கேட்டு கெஞ்சினேன்: பிரபல நடிகை ஓபன் டாக்!

ராஜமவுலி
ராஜமவுலி
Loading...

மும்பை:  ராஜமவுலியின் படத்தில் நடிக்க அவரிடம் நேரடியாக  சென்று வாய்ப்பு கேட்டதாக பிரபல பாலிவுட் நடிகை தெரிவித்துள்ளார். 

ராஜமெளலி இயக்கத்தில் வெளியான  'பாகுபலி' திரைப்படம் படம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகி வசூலைக் குவித்தது. பிரபாஸ், ராணா டகுபதி, சத்யராஜ், தமன்னா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் நடித்த அந்தப் படம், சுமார் 1000 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. ஆனால் பாகுபலி இந்தியாவைத் தாண்டி  உலகளவில் சாதனை படைத்தது.

bahubali

இதனால் உலக அளவில் கவனத்தை ஈர்த்த இயக்குநர் ராஜமௌலியின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் அவர்,  தற்போது 'ஆர் ஆர் ஆர்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் தெலுங்கு ரசிகர்களின் மனதை வென்ற நாயகர்களான  ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் தேஜா ஆகியோர் கதாநாயகனாக நடித்து வருகின்றனர். 

rrr

இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஆலியா பட்  நடிக்கிறார். இது குறித்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பாகுபலி படத்தை பார்த்த பிறகு ராஜமவுலியின் படத்தில்  நடித்து விட வேண்டும் என்று நினைத்தேன். ஒருமுறை அவரை விமானநிலையத்தில் சந்தித்த போது, உங்கள் படத்தில் சிறு வேடத்திலாவது நடிக்க வாய்ப்பு கொடுங்கள் என்று நானாகவே சென்று கெஞ்சினேன். அதனால் அவர் அளித்த வாய்ப்பு தான் ஆர் ஆர் ஆர் திரைப்படம். எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கு  நன்றி' என்றார்.

alia

இப்படமானது விடுதலைப் போராட்ட வீரர்களான  அல்லூரி  சித்தராம ராஜு  மற்றும் கோமராம் பீம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. முன்னதாக இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான டெய்சி எட்கர் ஜோன்ஸ் எனும் பிரிடிஷ் நடிகை அப்படத்திலிருந்து சமீபத்தில் விலகியது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: ’அந்த மாதிரி ஒரு படம் எடுங்கன்னு சொன்னா அந்தப் படத்தையே எடுத்துட்டீங்களே பாஸ்’...ஒரு கடைக்குட்டி தேவராட்ட சிங்கம்...

2018 TopTamilNews. All rights reserved.