kaappan-mobile kaappan-large
  • September
    21
    Saturday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


ஐஸ்வர்யா ராஜேஷ் - விஜய் தேவரக்கொண்டா இருவருக்கும் இடையே திடீர் பிரேக் அப்!!

ஐஸ்வர்யா ராஜேஷ் - விஜய் தேவரக்கொண்டா
ஐஸ்வர்யா ராஜேஷ் - விஜய் தேவரக்கொண்டா
Loading...

தெலுங்கில் முதன்முதலாக அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் விஜய் தேவரக்கொண்டாவுடன் இணைந்து நடிக்கிறார். இப்படத்திற்கு பிரேக் அப் என பெயரிட்டுள்ளது படக்குழு.

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இன்றைய இளைஞர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. 

aishwarya rajesh

ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் நீதானா அவன் எனும் திரைப்படம் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், பா. ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி எனும் திரைப்படம் இவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. 

அதன் பிறகு ரம்மி, காக்கா முட்டை, தர்மதுரை போன்ற படங்கள் இவரின் சினிமா வாழ்க்கைக்கு வேறொரு கோணத்தை கொடுத்து புகழையும் பெற்று தந்தது. 

கடந்த ஆண்டு வெளிவந்த வட சென்னை, கனா போன்ற படங்கள் இவருக்கு பெரும் வெற்றியை சேர்த்தது. குறிப்பாக, கனா திரைப்படத்தில் பெண் விளையாட்டு வீராங்கனை சமூகத்தில் படும் பாடுகளை பேசியது, இந்திய சமூகத்தினரிடம் பெரும் வரவேற்புடன் கூடிய வெற்றியை தந்தது.

vijaydevarkonda and aishwarya rajesh

தெலுங்கை தாய்மொழியாக கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், நீண்ட நாட்களாக தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க முயற்சி செய்து வந்துள்ளார். தற்போது விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷி கண்ணா நடிக்கும் படத்தில் இவருக்கு முக்கிய கதாபத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.  

இந்த தெலுங்கு படத்திற்கு தற்போது பிரேக் கப் என படக்குழு பெயரிட்டுள்ளது. மேலும் இது குறித்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் தேவரக்கொண்டா தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டிலும் வளர்ந்து வரும் நடிகர். எனது முதல் படமே அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நிச்சயம் அது வெற்றிப்படமாக அமைந்து; தெலுங்கில் மேலும் பல படங்கள் பண்ண ஆசைப்படுகிறேன் என்றார்.

2018 TopTamilNews. All rights reserved.