• April
    07
    Tuesday

Main Area

Main



அமித்ஷா குரலில் மிமிக்கிரி செய்த விமானப்படை அதிகாரி கைது!

arrested
arrested

டெல்லியில் இருக்கும் ஐ.ஏ.எஃப் என்கிற விமானப்படைத் தலைமையகத்தில் விங் கமாண்டர் என்கிற உயர் பதவி வகிப்பவர் குல்தீப் வகேலா.இவருக்கு டாக்டர் சந்திரேஷ் சுக்லா என்று ஒரு பல்டாக்டர் நெருங்கிய நண்பராக இருக்கிறார்.அவர் போபாலில் டெண்ட்டல் வேர்ல்டு என்கிற பெயரில் பிரமாண்ட மருத்துவமனை இருக்கிறது. 

kuldeep

அவருக்கு மத்தியபிரதேச மாநிலத்தில் இருக்கும் மத்திய அரசு மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆக விருப்பம்.மனுச்செய்தார்.கடந்த ஜனவரி 3-ம் தேதி நடந்த நேர்முகத்துக்குப் பிறகு நம்பிக்கை இழந்த டாக்டர் சுக்லா தனது நண்பர் விங்  கமாண்டர் குல்தீப் பகேலாவைப் பிடித்தார்.குல்தீப் 2014-ல் மத்திய பிரதேச கவர்னர் நரேஷ் யாதவிடம் ஏடிசியாக பணிபுரிந்தவர். அந்தத் தைரியத்தில் குல்தீப் நண்பருக்கு உதவ முன்வந்திருக்க வேண்டும்.

amit sha

டாக்டர் சுக்லா ம.பி கவர்னர் மாளிகைக்கு கான்ஃபரன்ஸ் கால் போட,குல்தீப் தன்னை மத்திய உள்துறை அமச்சர் அமித் ஷா என்று அறிமுகம் செய்துகொண்டு மத்திய மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் சுக்லாவை நியமிக்கும்படி சொல்லி இருக்கிறார். அந்த மத்திய மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் ஆங்கில மருத்துவம்,யுனானி,பல் மருத்துவம், நர்சிங்,ஆயுர்வேதம், பார்மஸி,யோகா அனைத்தும் வருகிற மிகப்பெரிய அமைப்பு அது.

lalji

குல்தீப்பின் ஃபோனைத் தொடர்ந்து கவர்னர் லால்ஜி தாண்டனின் உத்திரவுப்படி அலுவலக ஊழியர்கள் உள்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு,இப்போது கவர்னரிடம் பேசியது உள்துறை அமைச்சரா என்று விசாரித்ததில் உண்மை வெளியே வந்து விட்டது.அதைத் தொடர்ந்து விங்  கமாண்டர் குல்தீப் வகேலா,டாக்டர் சந்திரேஷ்வர் சுக்லா இருவரும் கைது செய்யப்பட்டனர்.அவர்கள் மீது  419,420 ஆகிய செக்‌ஷன்களில் வழக்குப் பதிவு செய்து மத்தியபிரதேச சிறப்புக் காவல்படை விசாரித்து வருகிறது.

2018 TopTamilNews. All rights reserved.