• August
    21
    Wednesday

Main Area

Main



நம்ப முடியவில்லை... எடப்பாடியாரை நினைத்து கதறும் அதிமுக நிர்வாகிகள்..!

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்
Loading...

சின்ன குழந்தையைக் கூட கேட்டால் தெரியும். ஒரே நாடு ஒரே தேர்தல் கோஷத்தை முன் வைத்துள்ள பாஜக தலைமை அதனை வைத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.Edappadi

உதாரணமாக என்ஐஏவுக்கு உச்சபட்ச பவர் கொடுக்கவே இதனை செய்து வருகிறது. தபால் துறையில் இந்தி, ஆங்கிலம் தேர்வு என்று அறிவித்ததும் பிறகு பின் வாங்கியதும் அரசியல் நிர்பந்தம்தான். ஆனால், உண்மையில் அத்துறையிலும் வடஇந்தியர்களை புகுத்தி ஒரே மொழி என்ற இலக்கை அடைவதுதான் திட்டம். நீட் தேர்வு விஷயத்திலும் ஒரே இந்தியா... ஒரே மருத்துவம்... ஒரே மருத்துவ தேர்வு என்பதே அவர்களின் கொள்கை. அதனால்தான் நீட் மசோதாவை நிராகரித்து இருக்கிறார்கள்.modi

இதன் மூலம் நீட் தேர்வு இந்தியா முழுமைக்கும் ஒரே மருத்துவக் கல்வி என்ற முறையை கொண்டு வந்து இருக்கிறார்கள். இது தெரியாமல்  எடப்பாடி பழனிசாமி, ‘’என்ன காரணத்துக்காக நீட் மசோதா ரத்து செய்யப்பட்டது என்று தெரியவில்லை. அது தெரிந்தால் தான் திருத்தம் செய்து மீண்டும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் போட்டு அனுப்ப வேண்டும்’ என்று சட்டப்பேரவையில்  சொன்னது நம்பும்படியாக இல்லை என்று அதிமுக கட்சி தொண்டர்களே பேசிக் கொள்கின்றனர். 
 

2018 TopTamilNews. All rights reserved.