• October
    21
    Monday

Main Area

Main



மேலும் ஒரு முக்கிய வீரருக்கு காயம்; கடுப்பில் இந்திய ரசிகர்கள் !!

இந்திய அணி
இந்திய அணி

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான விஜய் சங்கருக்கு வலை பயிற்சியின் போது காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெற்று வந்தாலும், புவனேஷ்வர் குமார் மற்றும் ஷிகர் தவான் போன்ற நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக விலகி வருவது இந்திய அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

vijayshankar

ஆஸ்திரேலிய அணியுடனான போட்டியின் போது காயமடைந்த ஷிகர் தவான் தொடரில் இருந்து நேற்று முழுமையகா விலகியதால் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்ட நிலையில், தற்பொழுது இந்திய அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான விஜய் சங்கருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக பி.டி.ஐ., செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 
சனிக்கிழமை நடைபெற உள்ள ஆஃப்கானிஸ்தான் அணியுடனான போட்டிக்கான இன்றைய பயிற்சியின் போது பும்ராஹ் வீசிய பந்து விஜய் சங்கரின் காலில் காயத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் பி.டி.ஐ., நிறுவனம் அந்த செய்தியில் தெரிவித்துள்ளது. 
முக்கிய வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து காயமடைந்து வருவது இந்திய ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதை சமூக வலைதளங்கள் மூலமாக பார்க்க முடிகிறது.

2018 TopTamilNews. All rights reserved.