• February
    27
    Thursday

Main Area

Main



ஊழல் செய்து கோடீஸ்வரியான பெண்! வெளிச்சத்துக்கு வந்த உண்மை

ISABEL DOS SANTOS
ISABEL DOS SANTOS

ஆப்பிரிக்காவின் பெரும் பணக்காரப் பெண்ணாக வலம்வரும் இசபெல் டோஸ் சாண்டோஸ், முறைகேடாக சொத்து குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

கடுமையான வறுமை, ஊழல் மற்றும் அதிக குழந்தை இறப்பு விகிதத்தை கொண்ட நாடு அங்கோலா. இப்படிப்பட்ட நாட்டில், முதல் கோடீஸ்வர பெண் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் இசபெல் டோஸ் சாண்டோஸ். 1979 ஆம் ஆண்டிலிருந்து 1992 ஆம் ஆண்டு வரை அங்கோலா அதிபராக இருந்த ஜோஸ் எட்வர்டோ டோஸ் சாண்டோஸின் மகள் தான் இசபெல் டோஸ் சாண்டோஸ். 43 வயதான இவர், அந்நாட்டு அரசு எண்ணெய் நிறுவனத்திற்கு தலைமை வகித்தார். 2013 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவின் பணக்கார பெண் மற்றும் முதல் பணக்காரர் மற்றும் பெண் கோடீஸ்வரர் என போர்ப்ஸ் பத்திரிகை இசபெல்லுக்கு புதிய அங்கீகாரத்தை கொடுத்தது. இவரின் சொத்து மதிப்பு 22 ஆயிரம் கோடி ரூபாயாகும். 

ISABEL DOS SANTOS

தனது தந்தை அதிபராக இருந்தபோது மின்சாரம், எண்ணெய், தொலைத்தொடர்பு, வைரச்சுரங்கம் மற்றும் எரிவாயு துறைகளில் பெருமளவில் முதலீடுகள் செய்த இசபெல், தற்போது 400க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் அதிபதியாக இருந்து வருகிறார்.

ISABEL DOS SANTOS

உலகில் மிக அதிக ஊழல் நிறைந்த நாடு என்று ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பால் அடையாளம் காணப்பட்டுள்ள அங்கோலாவில், தனது சாம்ராஜ்யத்தை நிலைநாட்டியுள்ளார் இசபெல். அரசு சொத்துகளை அபகரித்து சொத்து சேர்த்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள இசபெல், தன்னையும் தனது தந்தையையும் வேட்டையாட அங்கோலா அரசு சதித்திட்டம் தீட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
 

2018 TopTamilNews. All rights reserved.