• February
    22
    Saturday

Main Area

Main



இனி வாட்ஸ் அப்பில் வரப்போகுது விளம்பரம்!

whatsapp
whatsapp

பேஸ்புக்கைப்போல, வாட்ஸ் அப்பிலும் விரைவில் விளம்பரங்கள் வெளியிடப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இன்றைய நவீன உலகில் வாட்ஸ் அப் என்ற செயலி இல்லாத ஸ்மார்ட்போனும் இல்லை, அதனை பயன்படுத்தாத இளைஞர்களும் இல்லை என்ற நிலையில் உள்ளன் அந்த அளவுக்கு மிக முக்கியமான தொடர்பு கருவியாக வாட்ஸ் அப் செயலி இயங்குகிறது. வீடியோ, புகைப்படங்கள் பகிர்தல், சேட்டிங், குரூப் சேட்டிங், குரூப் காலிங், வீடியோ மற்றும் ஆடியோ கால் போன்ற அனைத்து வசதிகளும் வாட்ஸ் அப்பில் உள்ளது. இளைஞர் மற்ற சமூக வலைதளத்தைவிட வாட்ஸ் அப்பில்தான் அதிக நேரத்தை செலவழிக்கின்றனர் என அண்மையில் பரவலாக பேசப்பட்டது. அதுமட்டுமின்றி வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் தன்வசம் வாங்கிய பிறகு வாட்ஸ் அப்பில் பல பல புதிய அப்டேட்ஸ்கள் வந்து பயனர்களை குஷிப்படுத்தி வருகிறது. 

whatsapp

அந்தவகையில் தற்போது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களுக்கு இடையிடையே விளம்பரங்களை வெளியிட அந்நிறுவனம் முடிவுசெய்துள்ளது. இந்த திட்டம் மிக விரைவில் அமல்படுத்தப்படவுள்ளதாகவும் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களுக்கு இடையே விளம்பர நிறுவனத்தின் பெயர் சில நொடிகள் தெரியும் எனவும், தேவைப்பட்டால் அந்த விளம்பரத்தை க்ளிக் செய்து பார்த்துக்கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது.

2018 TopTamilNews. All rights reserved.