• October
    15
    Tuesday

Main Area

Main



’ஒரு ஆணியும் பிடுங்க வேணாம்...’ ஹெச்.ராஜா- தமிழிசைக்கு இப்படியொரு நிலைமையா..?

தமிழிசை
தமிழிசை

மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணியைச் சேர்ந்த அனைத்துக் கட்சி தலைவர்களும் அனல் பறக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தமிழிசை

 ஆனால் இப்போது  நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு, பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் ஹெச். ராஜா, தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன் ஆகியோர் தயாராக இருந்தும் அதிமுக தலைமை அதனை விரும்பவில்லை. அவர்கள் பிரச்சாரத்திற்கு வந்தால் அதுவே எதிர்வினையாகி விடும் என வேண்டா விருந்தாளியாக நினைத்து தடுத்து விட்டது அதிமுக தலைமை. ஹெச்.ராஜா

இந்த நான்கு தொகுதிகளையும் நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்று எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் கறாராக சொல்லி விட்டார்களாம்.  காரணம் ஹெச். ராஜா  அவ்வப்போது  பேசும் சர்ச்சை கருத்துகள் அவர் மீது மக்கள் கோபத்தில் இருக்கின்றனர். இவரால் சிறுபான்மையினர் வாக்குகள் சிதறி விடும்.  

தமிழிசை சவுந்திரராஜனுக்கு தூத்துக்குடியில் சோபியா விவகாரம் இன்னும் கம்பு சுத்தி வருகிறது. ஸ்டெர்லைட் விவகாரமும் வீம்பு பிடித்து வருகிறது.   பாஜக மீது பொதுவாகவே மக்களுக்கு கோபம் உள்ளது. இயற்கை பேரிடர்களின்போது பாஜகவின் நடவடிக்கைகள், மக்களுக்கெதிரான திட்டங்களை அமல்படுத்தியது ஆகியவற்றால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஜான் பாண்டியன்

ஜான் பாண்டியனுக்கும், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கும் இடையே மோதல்கள் இருந்துவருகிறது. ஜான்பாண்டியன் பிரச்சாரத்திற்கு சென்றால் பிரச்சனைகள் ஏற்படலாம் என்று நினைத்த அதிமுக, அவருக்கும் தடை விதித்துள்ளது. இதனை எல்லாம் உளவுத்துறை ரிப்போர்ட் மூலம் அறிந்து கொண்ட ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸும் அவர்களிடம் ’’நீங்க ஒரு ஆனியும் பிடுங்க வேண்டாம். நாங்களே பார்த்துக் கொள்கிறோம்’’ எனச் சொல்லி விட்டார்களாம். 

2018 TopTamilNews. All rights reserved.