kaappan-mobile kaappan-large
  • September
    21
    Saturday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


பிரபல நடிகருடன் இணையும் அதிதி பாலன்?

aditi
aditi
Loading...

சென்னை: இயக்குநர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் மலையாளப்படம் ஒன்றில் நடிகை அதிதி பாலன் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

aditi

இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் கடந்த 2017 ஆண்டு வெளியான திரைப்படம் அருவி.இப்படத்தில் கதாநாயகியாக நடித்த  அதிதி பாலன் தன் நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். இத்திரைப்படத்திற்காக, சிறந்த நடிகைக்கான சில விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். இப்படத்தை தொடர்ந்து அதிதி பாலன்  வேறு எந்த திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை.

santhosh

இந்நிலையில், மலையாளத்தில் உருவாகி வரும் ஜாக் அண்ட் ஜில் திரைப்படத்தில் அதிதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு  அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பிரபல நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாப்பாத்திரத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

2018 TopTamilNews. All rights reserved.