• August
    26
    Monday

Main Area

Main



நடிகை சாயிஷா கர்ப்பம்?! :இன்ஸ்டாகிராம் போஸ்ட்டால் குழம்பும் ரசிகர்கள்!

ஆர்யா - சாயிஷா
ஆர்யா - சாயிஷா
Loading...

நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்ட நடிகை சாயிஷா தற்போது   கர்ப்பமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

arya

நடிகர் ஆர்யா - சாயிஷா கஜினிகாந்த் படத்தில் நடித்த போது சாயிஷாவுடன் காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கடந்த காதலர் தினத்தன்று அறிவித்தனர். இதை தொடர்ந்து இவர்களின் திருமண ஏற்பாடு விறுவிறுப்பாக நடந்து வந்தது. இதையடுத்து கடந்த மார்ச் 10 ம் தேதி ஹைதராபாத்தில்  ஆர்யா - சாயிஷா இருவருக்கும் வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது. இதில் சூர்யா, கார்த்தி, ஷாம், இயக்குநர் ஏ.எல். விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். 

arya

இந்நிலையில் நடிகை சாயிஷா  கணவர் ஆர்யாவுடன் இரவு நேரத்தில் வெளியில் சென்ற புகைப்படங்களைத் தனது இன்ஸ்டராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், you + me  = என்று பதிவிட்டு குழந்தை ஸ்மைலியை போட்டுள்ளார்.  இதனால் சாயிஷா கர்ப்பமாக இருக்கலாம். அதனால் தான் இந்த இப்படிப் பதிவிட்டுள்ளார் என்று வலைதளவாசிகள் கருத்து கூற ஆரம்பித்து விட்டனர். ஆனால்  இது குறித்து ஆர்யா-சாயிஷா ஜோடி எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

You + me= ❤️??? @aryaoffl #nightout#hubzy#iloveyou

A post shared by Sayyeshaa (@sayyeshaa) on

முன்னதாக நடிகை சாயிஷா நடிகர்  சூர்யாவுடன் இணைந்து காப்பான்  படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம்  30 ஆம் தேதி திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

2018 TopTamilNews. All rights reserved.