kaappan-mobile kaappan-large
  • September
    18
    Wednesday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


கார்த்தி-ஜோதிகா படத்தில் இணைந்த பிரபல நடிகை!

கார்த்தி-ஜோதிகா
கார்த்தி-ஜோதிகா
Loading...

சென்னை: கார்த்தி  நடித்து வரும் திரைப்படத்தில் தற்போது நிகிலா விமல் இனைந்து நடிக்கவுள்ளார். 

'பாபநாசம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ஜீத்து ஜோசப் தனது இரண்டாவது படத்தைத் இயக்கி வருகிறார் . இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில், ஜோதிகா, கார்த்தி, சத்யராஜ், அம்மு அபிராமி ஆகியோர் நடிக்கின்றனர்.அக்கா - தம்பியாக ஜோதிகா - கார்த்தி நடிக்க, அவர்களுடைய அப்பாவாக சத்யராஜ் நடிக்கிறார். 

கடந்த மாதம் (ஏப்ரல்) 27-ம் தேதி தொடங்கிய படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இதில் நிகிலா விமல் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இவர் ஏற்கனவே சசிகுமார் நடித்த 'கிடாரி', 'வெற்றிவேல்' உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ளார். மேலும் இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.