காதல், ஏமாற்றம்...இரண்டாவது திருமணம்: ஆச்சி மனோரமா வாழ்க்கையின் கசப்பான மறுபக்கம்!?

ஆச்சி மனோரமா
ஆச்சி மனோரமா


சினிமா என்றாலே ஆண்களுக்கான தளம். நகைச்சுவை என்றால் ஆண்கள் மட்டுமே கோலோச்ச முடியும் என்ற பிம்பத்தை உடைத்தெறிந்தவர் மறைந்த பழம்பெரும் நடிகை ஆச்சி மனோரமா. தமிழ்,   தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை புரிந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார்.

 

MANORAMA

 குறிப்பாக எம்ஜிஆர் , சிவாஜி காலத்திலிருந்து விஜய் , அஜித், சிம்பு  காலம் வரை சுமார் 4 தலைமுறை நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தவர். நடிப்பு  மட்டுமல்லாது பாடகியாகவும் தன்னை மக்களுக்கு நிரூபித்து காட்டியவர் மனோரமா.  அதுமட்டுமல்லாது தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோருடன் நாடக மேடைகளிலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடன் தமிழ் படங்களிலும் என்.டி.ராமாராவுடன் தெலுங்கு படங்களிலும்  நடித்து ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமை பெற்ற  ஒரே நடிகை நம்ம ஆச்சி தான். 

 

ஆச்சி மனோரமா

கலைத்துறையில் சாதனை நாயகியாக வலம்வந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில்  மனோரமா நிறைய கஷ்டங்களை அனுபவித்துள்ளாராம். மனோரமா தன்னுடன்  நாடகங்களில் நடித்த எம்.எஸ் ராமநாதன் என்பவரை காதலித்து வீட்டை மீறி  1964 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.  

ttn

ஆனால்  அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனோரமா தனது கணவரை 1966ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இவர்களின் பிரிவுக்கு காரணம் அவரது கணவரின் வீண் சண்டை என்று கூறப்படுகிறது. அதாவது மனோரமாவுக்கு மகன் பூபதி பிறந்த 11 ஆவது நாளே  கணவர் குழந்தையை பார்த்துள்ளார்.

ttn

அதுவும் இந்த குழந்தையால் என் உயிருக்கு ஆபத்து  என்று ஜோதிடர் கூறியதாக கூறி சண்டையிட்ட அவர் தொடர்ந்து இதுபோன்ற வீண் பிரச்னைகள் செய்ததால் அவரை மனோரமா பிரிந்ததாகக் கூறப்படுகிறது.  ராமநாதன் மனோரமாவை விட்டுப் பிரிந்து இரண்டாவது திருமணம் செய்துகொள்ள, இறுதிவரை மகன் பூபதிக்காக வாழ்ந்து  மறைந்தார் .