• April
    02
    Thursday

Main Area

Main



'பலம் வெல்வதில்லை, தர்மமே வெல்லும்' - ரஜினிக்கு பாடம் சொன்ன கஸ்தூரி!

kasturi shankar
kasturi shankar

சென்னை: பாஜக பலம் மிகுந்த கட்சி என நடிகர் ரஜினி கூறியிருப்பதற்கு நடிகை கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி, முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை யார்? என கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக இன்று தன் போயஸ் கார்டன் இல்லம் முன்பு ரஜினி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பாஜகவை ஆபத்தான கட்சி என எதிர்க்கட்சிகள் கருதுவதாகவே கூறினேன். பாஜக ஆபத்தான கட்சியா என மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும். இதில் தற்போது எனது கருத்தை நான் தெரிவிக்கமாட்டேன். 10 பேர் சேர்ந்து கொண்டு ஒருவருடன் யுத்தம் செய்ய சென்றால் யார் பலசாலி? அந்த 10 பேரா இல்லை அந்த ஒருவரா என கேள்வி எழுப்பினார்.

10 பேர் சேர்ந்து கொண்டு ஒருவருடன் யுத்தம் செய்ய சென்றால் யார் பலசாலி? என ரஜினிகாந்த் கேள்வி எழுப்பி மறைமுகமாக பாஜகதான் மிகப்பெரிய பலசாலி என கூறியிருக்கிறார். இதன் மூலம் அவரது நிலைப்பாடு என்ன என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது என அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர். 

இந்நிலையில், நடிகை கஸ்தூரி தன் ட்விட்டர் பக்கத்தில், “கௌரவர்கள் பலசாலிகள். அவரை எதிர்த்து போரிட்ட பாண்டவர்களுக்கு படைபலம் குறைவு. ராவண பலசாலி. ராமரின் வானரசேனைக்கு அவ்வளவு வலிமை இல்லை.

பலம் வெல்வதில்லை, தர்மமே வெல்லும் என்பது சான்றோர் வாக்கு.” என மறைமுகமாக ரஜினிக்கு அறிவுரை கூறியுள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.