• April
    03
    Friday

Main Area

Main



அரசியல் கட்சியில் நானா? பரவிவரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விவேக்!

 நடிகர் விவேக்
 நடிகர் விவேக்

சென்னை: அரசியல் கட்சியில் சேரப் போவதாகப் பரவிய வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நடிகர் விவேக் பதிவு வெளியிட்டுள்ளார். 

நகைச்சுவை நடிகர், சமூக ஆர்வலர் என பன்முகத்தன்மை கொண்டவர் நடிகர் விவேக். நடிப்பு மட்டுமின்றி சமூகம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். பொது நலன் கருதி மரம் வளர்த்தல், இன்றைய இளைஞர்கள் செல்ஃபோனில் மூழ்காமல் இயற்கையைப் பாதுகாப்பது நல்லது என்பதைச் சொல்வதோடு மட்டுமின்றி களத்தில் இறங்கி பணியாற்றியும் வருகிறார்.

vivek

இந்நிலையில், அரசியல் கட்சி ஒன்றில் இணைந்து பிரச்சாரம் செய்யவுள்ளார் விவேக் என வதந்தி காட்டு தீ போன்று பரவியது. ஆனால், அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்ற பிரச்சார வீடியோவில் மட்டுமே நடிகர் விவேக் பேசியிருந்தார்.

இது தொடர்பாகத் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார் அதில், 'இதன் மூலம் அனைத்து ஊடகங்களுக்கும் நான் தெரிவிப்பது. நான் எந்தக் கட்சியிலும், அமைப்பிலும் இல்லை. பொதுமக்களில் ஒருவன். ஓட்டுப்போடுவது ஜனநாயகக் கடமை. அனைத்துக் கட்சியினர், தலைவர்கள், என் நண்பர்கள். வதந்திகளை நம்ப வேண்டாம்' என்று பதிவு செய்துள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.