• April
    03
    Friday

Main Area

Main



தமிழகம் முன்னேற அரசியல் மாற்றம் வேண்டும்: உருகிய நடிகர் ரஞ்சித்; வீடியோ!

pmk ranjith
pmk ranjith

சென்னை: தமிழகத்தின் தற்போது நடைபெற்று வரும் சூழலை மாற்றியமைக்க, அரசியல் மாற்றம் தேவை என நடிகர் ரஞ்சித் உருக்கமாக பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

பாட்டாளி மக்கள் கட்சியில் சமீபத்தில் இணைந்து, அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் நடிகர் ரஞ்சித். பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாகவும், குணச்சித்திர வேடத்திலும் ரஞ்சித் நடித்துள்ளார்.

இவர் தன் முகநூல் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில், “ஜாதி, மதங்களை கடந்து நம் சமுதாய முன்னேற்றத்திற்காக நாம் ஒருங்கிணைய வேண்டும். கவர்ச்சி, சினிமா போன்றவைகளில் மக்கள் மயங்கி இருப்பதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.

நாம் ஒன்றாக இருந்தால் தான் அனைத்தும் சாத்தியம் ஆகும். சின்ன சின்ன விஷயங்களில் நம் கவனம் திசை திருப்பப்படுகிறது. அதையெல்லாம் நாம் உணர்ந்து மாற்றத்தை கொண்டு வர வேண்டும். அன்புமணி மாற்றத்திற்கான தலைவராக இருக்கிறார். அவரிடம் பல நல்ல திட்டங்கள் இருக்கிறது. அவரை தேர்ந்தெடுத்தால் தமிழகத்திற்கு நல்ல மாற்றமாக இருக்கும். ஆகவே மக்கள் இணைந்து அவருக்கு ஆதரவு கொடுப்போம்” என்ற தொணியில் பேசியுள்ளார்.

சமூகவலைதளங்களில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

2018 TopTamilNews. All rights reserved.