• October
    15
    Tuesday

Main Area

Main



பாஜக-வுக்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு!

ரஜினிகாந்த் (கோப்புப்படம்)
ரஜினிகாந்த் (கோப்புப்படம்)

சென்னை: பாஜக-வின் தேர்தல் அறிக்கையில் உள்ள நதிகள் இணைப்பு பற்றிய வாக்குறுதி வரவேற்கத்தக்கது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கடந்த 1996-ம் ஆண்டிலிருந்தே அரசியலுக்கு வருவதாகச் சொல்லப்பட்டு வந்த ரஜினி கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்தார். அப்போது, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், போர் வரும் போது களம் காணுவோம் என்றும் அறிவித்தார்.

rajinikanth

தொடர்ந்து, ரஜினி ரசிகர் மன்றம், 'ரஜினி மக்கள் மன்றம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். எனினும், தற்போது வரை கட்சி தொடங்கப்படவில்லை. எனினும், எதிர்வரவுள்ள மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் ரஜினியின் கட்சி களம் காணும் என எதிர்ப்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தண்ணீர் பிரச்னையை யார் தீர்ப்பார்கள் என நம்புகிறீர்களோ அவருக்கு வாக்களியுங்கள் என்று மட்டும் கூறி விட்டு சென்றார் ரஜினி. இதனால், தேர்தலில் அவரது கட்சி போட்டியிடும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு வெறும் ஏமாற்றமே மிஞ்சியது.

அதேசமயம், அதுவரை டிவிட்டரில் அரசியல் செய்து வந்த மற்றொரு உச்ச நட்சத்திரமான கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து மக்களவை மற்றும் இடைத்தேர்தல்களில் களம் காண்கிறார்.

bjp manifesto

இந்நிலையில், சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த  ரஜினிகாந்த், பாஜக-வின் தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு பற்றிய வாக்குறுதி உள்ளது வரவேற்கத்தக்கது. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நதி நீர் இணைப்பு திட்டத்தை முதலில் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

நாட்டில் நதிகளை இணைத்தால் தண்ணீர் பிரச்னை, வறுமை தீரும் என தெரிவித்த ரஜினி, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதே நதிகள் இணைப்பு குறித்து தாம் வலியுறுத்தியதாகவும், அந்த திட்டத்திற்கு பகீரத்ன யோஜனா என பெயர் வைக்குமாறு அவரிடம் கூறியதாகவும், பகீரத்ன என்றால் சாத்தியமில்லாதது சாத்தியமாகும் என்பது பொருள் என்றும் தெரிவித்தார்.

kamalhaasan

அப்போது, கமலுக்கு ஆதரவா என்ற கேள்வியை செய்தியாளர்கள் முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த ரஜினி, யாருக்கும் ஆதரவு இல்லை என்ற என்னுடைய தேர்தல் நிலைப்பாட்டிலும், என்னுடைய அரசியல் நிலைப்பாட்டிலும் எந்த மாற்றமும் இல்லை. எனக்கும் கமலுக்கும் உள்ள நட்பை கெடுத்து விடாதீர்கள் என்றார்.

இதையும் வாசிங்க

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் ஆரம்பம்...அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

2018 TopTamilNews. All rights reserved.