• August
    24
    Saturday

Main Area

Main



ஜோதிகாவுடன் முதல் முறையாக இணையும் ரேவதி!

jothika and revathi
jothika and revathi
Loading...

சென்னை: நடிகை ஜோதிகா நடிக்கும் புதிய காமெடி திரைப்படத்தில் நடிகை ரேவதி முதல் முறையாக இணைந்து நடிக்கவுள்ளார்.

காற்றின் மொழி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை ஜோதிகா ஒரு புதிய காமெடி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் சூர்யா தயாரிப்பில் குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இப்படத்தை  இயக்குகிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. 

இந்நிலையில் இப்படத்தில் ஜோதிகாவுடன் முதல்முறையாக நடிகை ரேவதி நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் யோகிபாபு, மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடிக்கவுள்ளனர். விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். 

jothika

மேலும் இந்த படம் ஒரு குறுகிய கால தயாரிப்பு என்றும் வரும் ஜூன் அல்லது ஜூலையில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.


 

2018 TopTamilNews. All rights reserved.