• February
    24
    Monday

Main Area

Main



பட வாய்ப்புக்காக என்னையும் படுக்கைக்கு அழைத்தார்கள்: பிரபல நடிகர் பகீர் குற்றச்சாட்டு!

விவேக் தஹியா
விவேக் தஹியா

மும்பை:  பாலிவுட் நடிகர் ஒருவர்  பட வாய்ப்புக்காகத் தன்னை படுக்கைக்கு அழைத்தாக பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். 

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை திரைத்துறையில் வாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைக்கும்  வழக்கம் இருப்பதாகப் பலரும் குற்றச்சாட்டி வருகின்றனர். இது குறித்து நடிகைகளே பெரும்பாலும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் நிலையில், ஆண்களையும் படுக்கைக்கு அழைப்பதாக  பாலிவுட் தொலைக்காட்சி தொடர் நடிகர் விவேக் தஹியா பகிரங்கமாகக் கூறியுள்ளார்.  

vivek

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டி  ஒன்றில், ' சினிமாவில் வாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைப்பது சகஜமாகி விட்டது. அதை நாம் எப்படி அணுகுகிறோம் என்பது தான் முக்கியம். நான் திரைத்துறையில் என் மனசாட்சி படிதான் நடந்து கொண்டேன். நான் திரைத்துறைக்கு வரும்போது, ஒருவர் ஒருங்கிணைப்பாளர்கள் பட்டியலைக் கொடுத்து அவர்களைச் சந்திக்கும்படி சொன்னார்.அப்படி நான் சந்தித்த அவர், வாய்ப்புக்காகப் பணம் கேட்டார். நான் இல்லை என்று சொன்னதும்  உடனே சிலரை திருப்திப்படுத்தப் படுக்கைக்குச் செல்லுமாறு கூறினார். இப்படி கேவலமான காரியம் செய்துதான் படத்தில் நடிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை என்று கூறி அங்கிருந்து சென்று விட்டேன்' என்று தெரிவித்துள்ளார். 

vivek

நடிகைகளைத் தொடர்ந்து நடிகர் ஒருவரும் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகக் கூறி இருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.