• August
    21
    Wednesday

Main Area

Main



அசத்தலான உடம்பு வேணும்னு ஆன்லைன்ல ஆடர் பண்ணாதீங்க... ஆர்யா சொல்லும் ஃபிட்னெஸ் ரகசியம்..!

arya
arya
Loading...

‘ஸ்விக்கி ,ஜோமோடோவில் ஆடர்  பண்ணினால் அடுத்த பத்து நிமிஷத்தில் சாப்பாடு வீடு தேடி வந்திரும்.அதே மாதிரியே ஆன்லைனில் ஆடர் பண்ணி பிட்னெஸ் உடம்ப வாங்கிடணும்னு இன்னிக்கு இருக்கிற எங்ஸ்டர்ஸ் நினைக்கிறாங்க...அப்படியெல்லாம் நினைச்ச நேரத்துல செய்யணும்னு நினைச்சா தேவையில்லாத சிக்கல்தான் வரும்’ என்று முப்பது நாளில் பாடி பில்டர் ஆவது எப்படி என்று அலையும் இளைஞர்களுக்கு அட்வைஸ் பண்ணியிருக்கிறார் நடிகர் ஆர்யா!

arya

ஒரு ஃபிட்னெஸ் சென்டரின் திறப்பு விழாவிற்கு வந்த இடத்தில் மீடியா ஆட்கள் கேட்ட கேள்விக்குத்தான் இப்படியொரு பதிலை சொல்லியிருக்கிறார் ஆர்யா. இது குறித்து மேலும் அவர் பேசும்போது…’வாழ்நாள் முழுக்க எந்தவிதமான உடற்பயிற்சியும் செய்யாமல்,திடீர்ன்னு ஹெவியா ஒர்க்கவுட் பண்ணுறதும் தப்பு.உடம்புதான் பாதிக்கப்படுமே தவிர,நினைச்சமாதிரி பாடி பில்டரெல்லாம் ஆகிற முடியாது!

எல்லாத்துக்கும் ஒரு கால அளவு இருக்கு...தினமும் சாப்பாடு சாப்பிடமாதிரிதான் உடற்பயிற்சியும்,வாழ் நாளுக்கான எல்லா சாப்பாட்டையும் ஒரே நாள்ல சாப்பிட முடியுமா? அது மாதிரி உங்களோட உடல்வாகு என்னவோ அதுக்கு ஏத்த மாதிரி கிராஜுவாலா ஆரம்பிச்சு ஃபிட்னெஸ் ஆகணும்.

arya

ஒன்ஸ் உடம்பு ஃபிட்டாகிட்டா அதை மெயின்டைன் பண்றது அதைவிட முக்கியம்.உடம்புதான் நல்லா இருக்கேன்னு பயிற்சி செய்யுறதை நிப்பாட்டினால் உடம்பு முன்னாடி இருந்ததைவிட மோசமாக போயிடும்!’ என்று எச்சரித்திருக்கிறார்.

ஆர்யா மாதிரி ஆட்கள் சொன்னால் சரியாத்தான் இருக்கும்...பாத்து பண்ணுங்க மக்கா..!

2018 TopTamilNews. All rights reserved.