• October
    14
    Monday

Main Area

Main



பிரபல நடிகையை மணக்கும் நடிகர் ஆர்யா?

arya
arya

சென்னை: நடிகர் ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்தில் நடித்த நடிகை சாயிஷாவை மணக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் ஆர்யா பூஜா, நயன்தாரா, எமி ஜாக்சன், அனுஷ்கா  உட்பட பல்வேறு நடிகைகளுடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். கடந்த ஆண்டு, நடிகர் ஆர்யா சேனல் ஒன்றில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார். ஆர்யா மனதை வெல்லும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவரைத் திருமணம் செய்வார் என்று கூறப்பட்டது. ஆனால், அதில் யாரையும் அவர் தேர்ந்தெடுக் கவில்லை.

sayeesha

இந்நிலையில்  கஜினிகாந்த் படத்தில் நடித்த சாயிஷாவை காதலிப்பதாக திரைத்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது. கஜினிகாந்த்  படத்தில் ஆர்யாவுடன் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது என்று கூறப்படுகிறது.

arya

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மார்ச் மாதம் 10 ஆம் தேதி ஐதராபாத்தில் இவர்கள் திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல இந்தி நட்சத்திரங்கள் திலிப் குமார் - சாயிரா பானு தம்பதியின் பேத்தியான சாயிஷா, நடித்த வனமகன் மூலம் தமிழுக்கு வந்தார். பின்னர் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2018 TopTamilNews. All rights reserved.