• August
    25
    Sunday

Main Area

Main



குழந்தை பிறந்ததை மறைத்த பிரபல தொலைக்காட்சி நடிகர்! காரணம் இது தான்!

குழந்தை
குழந்தை
Loading...

சென்னை: பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியான செய்தியை பிரபல டிவி நடிகர் நான்கு நாட்கள் ரகசியமாக வைத்திருந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை, நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய தொடர்களில் ஹீரோவாக நடித்திருப்பவர் அமித் பார்க்கவ். அதுமட்டுமின்றி 'மிருதன்', சார்லி சாப்ளின் 2' போன்ற படங்களிலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இவரின் மனைவி ஶ்ரீரஞ்சனி, இவரும் விஜய் டி.வி-யின் தொகுப்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த 2016-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு கடந்த ஏழாம் தேதி பெண் குழந்தை பிறந்திருக்கிறது. 

amith

இவர்களுக்கு எப்போது குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்த்து ஒரு கூட்டமே காத்துகொண்டு இருந்தது. ஆனால் அமித் தனக்கு ஏழாம் தேதி குழந்தை பிறந்த நிலையில்,அதை பதினோராம் தேதி வரை ரகசியமாக வைத்திருக்க வேண்டியது ஏன் என்று ஒரு கேள்வி எழுந்தது.

இதற்கு காரணம் அட்சய திருதியை அன்று அவரின் மகள் பிறந்ததால், அந்த குழந்தை அதிர்ஷ்டமாக அமித் பார்க்ஸ் - ஸ்ரீரஞ்சனி தம்பதி கருதுகிறார்களாம்... எங்கே இந்த தகவலை வெளியே சொன்னால் குழந்தைக்கு அதிக அளவில் கண் பட்டுவிடுமோ என்ற பயத்தில் தகவலை வெளியே சொல்லாமல் ரகசியம் காத்து வந்தர்களாம்... 

என்னதான் சென்டிமென்டாக இருந்தாலும் குழந்தை பிறந்த மகிழ்ச்சியான செய்தியை கூடவா ரகசியமாக வைத்துக் கொள்வது என்று பார்கவ் ஸ்ரீரஞ்சனி ஜோடியை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

2018 TopTamilNews. All rights reserved.