• August
    21
    Wednesday

Main Area

Main



புதுக்கோட்டையில் விபத்து; 10 பேர் பரிதாப பலி

acccident
acccident
Loading...

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரழந்தனர்.

ஆந்திராவில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன் 12 பேர் சபரிமலை கோயிலுக்கு தரிசனம் செய்ய சென்றனர்.  தரிசனத்தை முடித்துவிட்டு அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு இன்று திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அவர்களது வேன் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் விபத்திற்குள்ளானது. 

திருமயம் பிரிவு சாலையில் அந்த வேன் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது. இந்த பயங்கர விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2018 TopTamilNews. All rights reserved.