kaappan-mobile kaappan-large
  • September
    19
    Thursday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


கமாண்டர் அபிநந்தனை கேலி செய்த பாகிஸ்தான் ஊடகம்: வைரலாகும் சர்ச்சை வீடியோ!

பாகிஸ்தான் டிவி விளம்பரம்
பாகிஸ்தான் டிவி விளம்பரம்
Loading...

இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு பாகிஸ்தான் டிவி ஒன்று விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

உலகக் கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். அதன் வெளிப்பாடாகத் தான் இந்த போட்டிக்கான டிக்கெட் ஆரம்பித்த சில  மணிநேரங்களில் விற்றுத்  தீர்ந்தது. 

ind

இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை முன்னிட்டு பாகிஸ்தான் டிவி ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய விமானப்படையின் விங் காமாண்டர் அபிநந்தனை போல் மீசையை வைத்துக்கொண்டு ஒருவர்  வருகிறார்.  அவரிடம் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற இந்தியாவின் யுக்தி என்ன என்று கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு அவர் அது மன்னித்து விடுங்கள், அது பற்றி உங்களிடம் கூற முடியாது என்று கூறுகிறார். மேலும் இந்த விளம்பரத்தின் இறுதியில், #LetsBringTheCupHome என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

 

இந்த விளம்பரமானது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்ட இந்திய விமானப்படையின் விங் காமாண்டர் அபிநந்தனை டீ  அருந்துவது போல ஒரு போலி வீடியோ வெளியானது. அதை மையமாகக் கொண்டே இந்த விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளதாகப் பலரும் கருத்து கூறி வருகின்றனர். 

அபிநந்தன் போல, நடித்தவரின் முகத்தில் கருப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது நிறவெறி தாக்குதலைக் குறிக்கிறது என்றும் சமூகவலைதளவாசிகள் கருத்து கூறி வருகின்றனர். 

2018 TopTamilNews. All rights reserved.