• August
    21
    Wednesday

Main Area

Main



சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு | அதிர்ச்சி வீடியோ

 குழந்தை
குழந்தை
Loading...

சென்னையில் நாளுக்கு நாள் குற்றங்கள் பெருகி வருகிற நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3 வயதான ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராம்சிங் -நீலாவதி தம்பதியர் நேற்றைய முன் தினம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். இவர்களுடைய 3 வயதான மகன் சோம்நாத்துடன் பெற்றோர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தூங்கியுள்ளனர்.

child

 அதிகாலை கண்விழித்துப் பார்த்த போது குழந்தையை காணாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், இரயில் நிலைய போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் குழந்தையை ஒரு நபர் கடத்திச் செல்வது சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபர் சென்ட்ரலில் இருந்து தாம்பரம் சென்று அங்கு இறங்கிச் செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.

child kidnap

இந்த சிசிடிவி கேமரா காட்சியை வெளியிட்ட போலீசார் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக 3 தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்ட நிலையில், காணாமல் போன  குழந்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  திருப்போரூரில் தனியாக நின்றுக் கொண்டிருந்த குழந்தையை ஒருவர் மீட்டெடுத்து, காப்பகத்தில் ஒப்படைத்துள்ளார். அதன் அடிப்படையில் குழந்தையை மீட்டு செங்கல்பட்டில் உள்ள அரசு காப்பகத்தில் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.

child kidnap

நடைமுறைகளுக்குப் பின்னர் குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
இதற்கு முன்பும் இதே போல் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் சென்னை சென்ட்ரல் நிலையத்தில் பர்தா அணிந்த பெண் ஒருவர் குழந்தையை கடத்திச் சென்றார். இதுவரை இந்த வழக்கிலும் எந்த வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்திருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

2018 TopTamilNews. All rights reserved.