kaappan-mobile kaappan-large
  • September
    19
    Thursday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


பெற்றோரை கவனித்துக்கொள்ளாவிட்டால் சிறை தண்டனை

Grand mother
Grand mother
Loading...

பெற்றோரை அவர்களது வயதான காலத்தில் கவனித்துக்கொள்ளாமல் கைவிடும் மகன் அல்லது மகள்களுக்கு சிறை தண்டனை வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவிற்கு, முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.

இதற்கான பரிந்துரையை பீகார் மாநில சமூகநலத்துறை அமைச்சகம் அளித்தது.  பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்களிடம் இருந்து புகார்கள் வந்தால், பிள்ளைகள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

2018 TopTamilNews. All rights reserved.