• February
    28
    Friday

Main Area

Main



பந்துவீச்சில் 8 விக்கெட், பேட்டிங்கில் 134 ரன்கள்.. ஒரே போட்டியில் வரலாற்று சாதனை படைத்த வீரர்!!

kpl
kpl

கர்நாடகா பிரீமியர் லீக் தொடரில் ஒரு டி20 போட்டியில் பந்துவீச்சில் 8 விக்கெட் மற்றும் பேட்டிங்கில் 134 ரன்கள் அடித்து புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார் கிருஷ்ணப்பா கவுதம். தற்போது கர்நாடகாவில் கர்நாடகா பிரீமியர் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 7 அணிகள் பங்கேற்கின்றன. லீக் போட்டிகள், குவாலிஃபைர் மற்றும் இறுதிப்போட்டி என்ற வடிவத்தில் நடைபெறும் இந்த தொடரில், 15வது லீக் போட்டியில் பெல்லரி டஸ்கர்ஸ் மற்றும் சிவமோகா லயன்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதின.

முதலில் டாஸ் வென்ற பெல்லரி டஸ்கர்ஸ் அணி பேட்டிங் செய்த முடிவு செய்தது. மழை காரணமாக போட்டி இரு தரப்பிலும் தலா 15 ஓவர்கள் என முடிவு செய்யப்பட்டது. முதலில் களமிறங்கிய பெல்லாரி டஸ்கர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவர்களில் 203 ரன்கள் அடித்தது. இதில் கிருஷ்ணப்பா கவுதம் 56 பந்துகள் மட்டுமே சந்தித்து 134 ரன்கள் அடித்து அணியை இமாலய இலக்கிற்கு எடுத்துச் சென்றார். இவர் 7 பவுண்டரிகள் மற்றும் 13 சிக்ஸர்களை அடித்தார்.அதற்கு அடுத்ததாக மிகப்பெரிய இலக்கை துரத்திய சிவமோகா லயன்ஸ் அணிக்கு துவக்கம் முதலே தடுமாற்றமாக இருந்தது. நடுவரிசையில், பிலால் மற்றும் தேஷ்பாண்டே இருவரும் சற்று நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். ஆனால், பின்னால் வந்த அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க இறுதியில் 16.3 ஓவர்களில் 133 ரன்கள் மட்டுமே எடுத்து 70 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது. பந்துவீச்சில் மிகவும் அபாரமாக அசத்திய கிருஷ்ணப்பா கவுதம் 4 ஓவர்களில் வெறும் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம் ஒரே டி20 போட்டியில் பந்துவீச்சில் 8 விக்கெட் மற்றும் பேட்டிங்கில் சதம் என இதுவரை எவரும் நிகழ்த்திராத புதிய சாதனையை படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் பெல்லரி டஸ்கர்ஸ் அணி புள்ளி பட்டியலில் 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

2018 TopTamilNews. All rights reserved.