• February
    26
    Wednesday

Main Area

Main



இயற்கை இருக்கு மின்சாரம் எதற்கு?; மின்சார இணைப்பில்லாமல் வாழும் முன்னாள் பேராசிரியை..!

ஹேமா சானே
ஹேமா சானே

ஹேமா சானே(79) எனும் முன்னாள் பேராசிரியை ஒருவர் மின்சார இணைப்பை நிராகரித்து தன் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

hem

கார்வேர் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஹேமா சானே. கடந்த 1940-ஆம் ஆண்டு முதல் அதே பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். அவர் வீட்டை சுற்றி பச்சை பசேலென செடி கொடிகள் நிறைந்திருக்கிறது. இயற்கையோடு தான் கொண்ட தீராக்காதலின் காரணமாக அதனோடு தன் வாழ்வை இணைத்துக் கொண்டார். அதனால் தன் வீட்டில் மின்சார இணைப்பில்லாமல் வாழ்ந்து வருகிறார்.

hema

இதுகுறித்து அவர், உணவு, உடை, இருப்பிடம் என்பது அவசியமான தேவை. மின்சாரம் என்பது பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தேவையில்லாமலே என்னால்  வாழமுடியும். என்னை சிலர் முட்டாள் என்பார்கள், அதுபற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை என தெரிவித்துள்ளார்.

hem

சாவித்ரிபாய் பூலே பல்கலைக் கழகத்தில் பி.எச்டி (தாவரவியல்) பட்டம் பெற்ற ஹேமா, புத்வார் பகுதியில் உள்ள குடிசை வீடொன்றில் வசித்து வருகிறார். மின்சாரம் இல்லாமல் எப்படி வாழ்கிறீர்கள் என்ற கேள்வியுடன் யாராவது அவரை அனுகினால், மின்சார வசதியுடன் எப்படி வாழ்கிறீர்கள் என கலாய்த்து அனுப்பிவிடுகிறார்.  வீட்டை சுற்றியுள்ள பறவைகள்தான் தனக்கு சிறந்த தோழர்கள் என்கிறார் இந்த இயற்கையின் காதலி. இயற்கை மற்றும் சுற்றுசூழல் குறித்து பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். இனியும் அந்த பணி தொடரும் என்கிறார் ஹேமா.

2018 TopTamilNews. All rights reserved.