• April
    05
    Sunday

Main Area

Main



மனோன்மணி மிலிட்டரி ஓட்டல்! 60 ஆண்டு அதிசயம்!

mutton curry (Manonmani Military hotel)
mutton curry (Manonmani Military hotel)

திருவாரூர் ரயில் நிலையம் அருகில் 1955-ம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது இந்த அதிசய மிலிட்டரி ஓட்டல். இந்த ஓட்டலின் அதிசயம் அதன் மெனுவில் இருக்கிறது. தினமும் மதியமும் ,இரவும் இரண்டு வேளை சாப்பாடு மட்டும் தருகிறார்கள். இட்லி,தோசை டிஃபன் வகையறாக்கள் இங்கே இல்லை! மதியம் சோறும் மட்டன் குழம்பும்,இரவில் சோறும் மீன் குழம்பும்! அவளவுதான் மெனு!

thiruvarur-hotel
Source: Chennai Vlogger(Youtube)

இலையில்தான் பரிமாறுகிறார்கள். ஒரு கீரை அல்லது கூட்டு உண்டு. சோற்றைப் போட்டு மணக்க மணக்க மட்டன் குழம்பு ஊற்றுகிறார்கள்.இந்த மட்டன் குழம்பின் மணத்துக்கு காரணம், இந்த மனோன்மணி உணவகத்தில் மட்டன் குழம்பில் மட்டன் மட்டும் போடுவதில்லை.மட்டனோடு சேர்த்து முருங்கைக்காய் மற்றும் உருளைக் கிழங்குகளும் வெட்டிப் போடப்பட்டு இருக்கின்றன. அதுதான் இங்கே குழம்பு மணம் தூக்கலாக இருக்க காரணம்.

மட்டனுடன் மட்டன் வருவல்,ஈரல் ஃபிரை, நுரையீரல் ஃபிரை,மட்டனும் முட்டையும் சேர்த்துச் செய்த மட்டன் பொடிமாஸ் இவற்றுடம் மட்டன் 'சாப்பீஸ்' என்கிற பெயரில் மட்டன் சாப்ஸும் உண்டு.எல்லாமே வெறும் 30 ரூபாய்தான்.அந்த முப்பது ரூபாய்க்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவுதான் தருகிறார்கள். ஆனால் நீங்கள் இரண்டோ மூன்றோ சைடிஷ்கள் கூட வாங்கிக் கொள்ளலாம்.
மட்டன் குழம்பு இல்லாமல்,ரசமும் மோரும் தருகிறார்கள்.

military-hotel-09

இரவில் மட்டனுக்குப் பதிலாக மீன்! மீன் குழம்பு, ரசம்,மோர் தருகிறார்கள். தொடுகறிகளாக மீன் வறுவல், இறால்,முட்டை தருகிறார்கள். இதிலும் முட்டை தவிர மற்றவை அதே முப்பது ரூபாய்தான்.1955-ல் இருந்து இதேதான் மெனு! அதிகம் போனால் இருபது பேர் சாப்பிடலாம்,அவளவுதான் இடவசதி.சமையத்தில் ஐந்து நிமிடம் காத்திருந்து சாப்பிட நேரலாம்.நகர் முழுவதும் இருந்து ரசிகர்கள் தேடி வருவதால் மனோன்மணி எப்போதுமே கொஞ்சம் பிசிதான். முருங்கைக்காய் மணத்துடன் ஒரு வாய் சாப்பிட்ட உடன் உங்களுக்கே புரியும்.

2018 TopTamilNews. All rights reserved.