• February
    29
    Saturday

Main Area

Main



ஃபனி புயல்; ஒடிசாவை மீட்டெடுக்க கிளம்பிய 5,000 பேர்?!...

ஃபனி புயல் பாதிப்பு
ஃபனி புயல் பாதிப்பு

ஃபனி புயலால் ஒடிசா மாநிலம் உயிர் சேதத்தையும், பெரும் அளவு பொருளாதார சேதத்தையும் சந்தித்துள்ளது. இதுவரை 41 பேர் இந்த புயலின் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மின்சார இணைப்பு, தொலை தொடர்பு உள்ளிட்டவை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஃபனி புயல் அதிகம் பாதித்த பூரி மாவட்டத்தில் மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். கட்டாக், மயூர்பஞ்ச், ஜெஜ்பூர், புபனேஸ்வர் மற்றும் கேந்த்ரபரா முறையே 20 பேர் இறந்திருக்கின்றனர் என சிறப்பு நிவாரண ஆணையர் செதி தகவல் தெரிவித்துள்ளார்.

odis

ஒடிசா மாநிலத்தை பாதிப்பில் இருந்து மீட்டெடுக்க பிற மாநிலங்களின் உதவி அவசியமானதாக இருக்கிறது. மேற்கு வங்காளம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் இருந்து 5,000 திறமையான நபர்கள், தேவையான உபகரணங்களுடன் ஒடிசா நோக்கி விரைந்துள்ளனர். 2,500 எலக்ட்ரீஷியன்கள் மின்சாரக் குறைபாடை சரிசெய்ய அங்கு வந்துவிட்டனர் என அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

fani

இதுகுறித்து தலைமைச் செயலர் ஏபி பதி, ஃபனி புயலால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களிலும் மின் மற்றும் தொலை தொடர்பு இணைப்புகள் வெகு விரைவில் சரிசெய்யப்பட்டு இயல்பு நிலை திரும்பும் என்றார். அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பூரி மாவட்டத்தில் மின் மற்றும் தொலை தொடர்பு சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது.

நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் ஜெனரேட்டர் உதவியுடன் நீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என கூறினார். இந்த புயலால் 1.5 கோடி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். கிட்டத்தட்ட 5 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளது. 1 லட்சத்துக்கும் அதிகமான மின் கம்பங்கள் இந்த புயலால் வீழ்ந்திருக்கிறது. புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவிலை சரிசெய்ய 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

jaga

ஒடிசா மாநில ஐஏஎஸ் அதிகாரிகள் அமைப்பு சார்பாக தங்கள் மாத சம்பளத்தில் ஆளுக்கு 10,000 ரூபாய் கொடுக்க முடிவு செய்துள்ளனர். இது ஒருபுறமிருக்க, பாஜகவும் காங்கிரசும் மாநில அரசான பாஜத கட்சியின் கவனக்குறைவே அதிக இழப்புக்கு காரணம் என குற்றம்சாட்டி வருகிறது.
 

2018 TopTamilNews. All rights reserved.