பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் அருகே 3 ஏவுகணைகள் தாக்கியதால் பரபரப்பு | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainபாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் அருகே 3 ஏவுகணைகள் தாக்கியதால் பரபரப்பு

us embassy / top tamil news
us embassy / top tamil news

பாக்தாத்: ஈராக் தலைநகரான பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் அருகே 3 ஏவுகணைகள் தாக்கியதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

ஈரான் ராணுவத் தளபதி சுலைமானி அமெரிக்காவால் கொல்லப்பட்டதால் இரண்டு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஈராக்கில் உள்ள அமெரிக்கா தூதரகத்தை குறி வைத்து ஈரான் அடிக்கடி ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இருப்பினும் ஈரான் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த நிலையில், பாக்தாத்தில் உள்ள அமெரிக்கா தூதரகத்தை குறி வைத்து ஈரான் மறுபடியும் ஏவுகணை தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. அமெரிக்கா தூதரகம் அருகே 3 ஏவுகணைகள் விழுந்ததாக ஈராக் செய்திகள் மூலம் தெரிய வந்துள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விபரம் குறித்து இதுவரை தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

2018 TopTamilNews. All rights reserved.