• November
    21
    Thursday

Main Area

Main



வீட்டில் ஏசி வெடித்து 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

கோப்புப்படம்
கோப்புப்படம்

திண்டிவனம் அருகே மின்கசிவு காரணமாக ஏசி வெடித்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள காவேரி பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜ்(60). இவர் வெல்டிங் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி பெயர் கலைச்செல்வி. இந்த தம்பதியருக்கு கோவர்த்தனன், கவுதமன் 

நேற்று முன்தினம் ஒரு அறையில் கோவர்தனும், அவரது மனைவி காயத்ரியும். ஒரு அறையிலும், ராஜி, கலைச்செல்வி, கவுதம் ஆகியோர் தனி அறையிலும் தூங்கச் சென்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் ராஜி தூங்கிக்கொண்டிருந்த அறையில் இயங்கிய ஸ்பிளிட் ஏசி வெடித்து தீப்பிடித்தது.

அதன் பின்னர் புகை பரவியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள், அந்த வீடு முழுவதுமாகத் தீப்பற்றியது. அப்போது வெளியான வாயுவால் மூச்சுத் திணறி ராஜி, கலைச்செல்வி, கவுதம் ஆகிய மூவரும்  உடல் கருகிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து விசாரணை செய்த திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

2018 TopTamilNews. All rights reserved.