kaappan-mobile kaappan-large
  • September
    19
    Thursday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


மின்தடையால் அரசு மருத்துவமனையில் 3 பேர் பலி; மதுரையில் அவலம்!

கோப்புப்படம்
கோப்புப்படம்
Loading...

மதுரை: மின்தடையால் ஆக்சிஜன் விநியோகம் தடைபட்டதால் மூன்று பேர் பலியான அவலம் மதுரை அரசு மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது.

மதுரையில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் கூடிய கனமழை நேற்று பொழிந்தது. இதனால், பல்வேறு இடங்களில் மின்கம்பிகள் அறுந்து மின் தடை ஏற்பட்டது, இரவு முழுவதும் நீடித்த இந்த மின்தடையால், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையிலும் மின்சாரத் தடை ஏற்பட்டது.

madurai gh

இதனால், மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டன. ஆனால், சில மணி நேரங்களிலேயே அவை பழுதானதாக தெரிகிறது. இதையடுத்து, வென்டிலேட்டர் கருவிகளும் செயலிழந்து நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த செயற்கை சுவாசம் (பிராணவாயு-ஆக்சிஜன்) தடைபட்டதால், தலைக்காய சிகிச்சை பிரிவில் இருந்த மதுரை அருகே பூஞ்சுத்தியை சேர்ந்த மல்லிகா (55), ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (55), ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பழனியம்மாள்(60) ஆகிய மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

dead

இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதேசமயம், அவர்கள் மூவரும் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், ஆக்சிஜன் இல்லாததால் அவர்கள் உயிரிழந்தார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கடந்த 2017-ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள அரசுக்கு சொந்தமான பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளை வீக்கம் ஏற்பட்டு 72 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு பிராண வாயு (ஆக்சிஜன்) சிலிண்டர் விநியோகித்து வந்த தனியார் நிறுவனம் தனது நிலுவைத் தொகைக்காக ஆக்ஸிஜன் விநியோகத்தை நிறுத்தியதே குழந்தைகள் பலியானதற்குக் காரணம் என அப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2018 TopTamilNews. All rights reserved.