பராமரிப்பு பணி காரணமாக 285 ரயில்கள் ரத்து! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainபராமரிப்பு பணி காரணமாக 285 ரயில்கள் ரத்து!

TRain
TRain

இந்தியா முழுவதும் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று இயக்க திட்டமிடப்பட்ட 285 ரயில்களை இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது. 

இந்த 285 ரயில்களில் பெரும்பாலானவை பயணிகள் ரயில்களாகும். சில மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் சில சிறப்பு ரயில்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ரத்து செய்யப்பட்டுள்ள இந்த 285 ரயில்களின் பட்டியலை National Train Inquiry System (NTS) என்ற வலைதளத்தில் இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.

Maintenance work

இந்த பட்டியலில் உள்ள ரயில்களில் பயணிக்கவிருந்த பயணிகளுக்கும் தனித்தனியே எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்டுவிட்டதாக ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்கள் ரத்து செய்யப்பட்ட பயணிகளுக்கு அவர்களின் ரயில் டிக்கெட்டின் முழுத் தொகையும் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.