• February
    27
    Thursday

Main Area

Main



பங்குச் சந்தையில் ரூ.1.03 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்! சென்செக்ஸ் 458 புள்ளிகள் வீழ்ச்சி....

பங்கு வர்த்தகம்
பங்கு வர்த்தகம்

சீனாவில் கோரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது உலக நாடுகளுக்கு கடும் அச்சத்தை கிளப்பியுள்ளது. அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வர்த்தகத்தின் இடையே சரிவு கண்டது. மேலும் சர்வதேச நிலவரங்களும் சாதகமாக இல்லாததால் இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது.

மகிந்திரா

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் மகிந்திரா அண்டு மகிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், டெக் மகிந்திரா உள்பட 9 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டாடா ஸ்டீல், இண்டஸ்இந்த் வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி மற்றும் பவர் கிரிட் உள்பட 21 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

டாடா ஸ்டீல்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,036 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,524 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 155 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.159.24 லட்சம் கோடியாக சரிந்தது. ஆக, இன்று ஒரே நாளில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.1.03 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 458.07 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 41,155.12 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 129.25 புள்ளிகள் இறங்கி 12,119.00 புள்ளிகளில் நிலைகொண்டது.

2018 TopTamilNews. All rights reserved.