• November
    17
    Sunday

Main Area

Main



வாரத்தின் முதல் வர்த்தக தினத்தில் முதலீட்டாளர்களை சந்தோஷப்படுத்திய பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 87 புள்ளிகள் உயர்ந்தது

பங்கு வர்த்தகம்
பங்கு வர்த்தகம்

அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போர் பதற்றம் தணிந்து தற்போது இரு நாடுகளும் சுமூகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கின. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பொதுத்துறை வங்கிகளின் தலைமை செயல்அதிகாரிகளுடான சந்திப்பில் கலந்து கொண்டார். கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன. இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது.

அமெரிக்கா-சீனா வர்த்தக போர்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில், ஓ.என்.ஜி.சி., டாடா மோட்டார்ஸ், சன் பார்மா, யெஸ் பேங்க், இண்டஸ்இந்த் பேங்க், ஆக்சிஸ் வங்கி, டி.சி.எஸ். மற்றும் மாருதி உள்பட 24 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. இன்போசிஸ், பஜாஜ் பைனான்ஸ், எல் அண்டு டி, கோடக்பேங்க் மற்றும் எச்.டி.எப்.சி. ஆகிய 6 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

டாடா மோட்டார்ஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,227 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,282 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும் 225 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.144.82 லட்சம் கோடியாக உயர்ந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.144.06 லட்சம் கோடியாக இருந்தது.

பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 87.39 புள்ளிகள் உயர்ந்து 38,214.47 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 36.10 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,341.15 புள்ளிகளில் நிலை கொண்டது.

2018 TopTamilNews. All rights reserved.