• August
    21
    Wednesday

Main Area

Main



வருஷத்துக்கு 2  பில்லியன் யுஎஸ் டாலர்கள் | தாவூத் இப்ராஹிமுக்கு அடைக்கலம் கொடுக்கும் பாகிஸ்தான்

சையத் அக்பருதீன்
சையத் அக்பருதீன்
Loading...

1993 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டு வெடிப்புக்கு காரணமான நிழல் உலக  தாதா தாவூத் இப்ராஹிமுக்கு, அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பு கொடுத்து வருவதாக பாகிஸ்தான் மீது இந்தியா ஐநா சபையில் குற்றம் சாட்டியுள்ளது.  மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காரணமான பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் தற்போது பாகிஸ்தானில் பதுங்கியுள்ளார். இந்தியாவால் நீண்ட நெடுநாட்களாக தேடப்பட்டு வரும் குற்றவாளியான தாவூத் தற்போது பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதை பல முறைகள் ஆதாரத்துடன் எடுத்துச் சொல்லியும், ‘தங்கள் நாட்டில் தாவூத் இல்லை’ என்று தொடர்ந்து பாகிஸ்தான் மறுத்து வருகிறது.

dhavooth

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா, மும்பை தொடர் வெடிகுண்டு சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது டி-கம்பெனி  பாகிஸ்தானில் இருந்து தொடர்ந்து பயங்கரவாத செயல்களைச் செய்து வருவதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து, ஐஎஸ் இயக்கத்திற்கு எதிராக உலகம் ஒன்று திரண்டதைப் போல தாவூத் மற்றும் ஹபீஸ் சையத் போன்றோருக்கு எதிராகவும் ஓரணியில் உலகம் திரள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

sabha

இது பற்றி ஐநா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய இந்திய தூதரும் ஐநா.வுக்கான இந்திய பிரதிநிதியுமான சையத் அக்பருதீன், இந்தியாவில் தங்கம் கடத்தல், கள்ளநோட்டு அச்சடித்தல், போதை பொருட்களைக் கடத்துவது, ஆட்களை மிரட்டி பணம் பறித்தல் போன்ற பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த தாவூத் இப்ராஹிம் தற்போது தீவிரவாத இயக்கமாக தனது டி - கம்பெனியை மாற்றிக் கொண்டதாக குறிப்பிட்டார். தாவூத் இப்ராஹிம்மின் டி-கம்பெனியின் சட்டவிரோத பொருளாதார நடவடிக்கைகள் குறித்து வெளியுலகம் அதிகம் அறிந்திருக்கவில்லை என்றும் உலக நாடுகளிடம் விளக்கினார். 

syed

சுமார் 5000 கிரிமினல்கள் வரையில் தாவூத் இப்ராஹிம்மின் டி-கம்பெனியில் வேலைப் பார்ப்பதாகவும், அவர்கள் அனைவருமே போதைப் பொருட்களைக் கடத்துவது, தங்கம் கடத்துவது, ஆட்களைக் கடத்துவது என்று இந்த பயங்கரவாத செயல்களின் மூலமாக ஒரு வருடத்திற்கு 2 பில்லியன் யு.எஸ். டாலர்கள் பணம் பெறுவதாகவும் குற்றம் சாட்டினார். சர்வதேச தீவிரவாத அமைப்புகளான அல்-கொய்தாவுடன் அவர்களுக்கு தொடர்புகள் இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
தாவூத்தை மறைத்து வைத்து அடைக்கலம் கொடுத்து வரும் அண்டை நாடு,  அப்படி ஒருவர் அவர்கள் நாட்டில் இருப்பதையே ஒப்புக் கொள்ள மறுக்கிறது. இந்தியாவிற்கு மட்டுமில்லாமல் உலக நாடுகளுக்கே இது மிகப்பெரிய அச்சுறுத்தலாக நீடிப்பதாகவும் சையத் அக்பரூதீன் தெரிவித்தார். ஐ.எஸ் இயக்கத்திற்கு எதிராக உலகம் ஒன்று திரண்டது போல் தாவூத் மற்றும் ஹபீஸ் சையத் போன்றோருக்கு எதிராகவும் ஓரணியில் திரள வேண்டும் என்றும் சையத் வலியுறுத்தினார்.

2018 TopTamilNews. All rights reserved.