• August
    24
    Saturday

Main Area

Main



ஏலத்துக்கு வருகிறது செல்வச்சீமாட்டி வைத்திருந்த ஜேம்ஸ் பாண்ட் கார்!

James Bond’s supercar
James Bond’s supercar
Loading...

1964ஆம் ஆண்டு வெளியான ஜேம்ஸ் பாண்ட் படமான கோல்ட்ஃபிங்கர் படமும் அதில் வரும் ஆஸ்டன் மார்ட்டின் காரும் ஞாபகத்துக்கு வருகிறார்களா? ஜேம்ஸ் பாண்ட் படத்துக்கென்றே பிரத்யேகமாக அச்சுஅசப்பில் ஒரே மாதிரி இருக்கும் இரு DB5 கார்களை உருவாக்கி பட நிறுவனத்திடம் தந்தது ஆஸ்டன் மார்ட்டின் நிறுவனம். கோல்ட்ஃபிங்கர் படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்து வெளிவந்த தண்டர்பால் படத்திலும் மேற்படி கார் இடம்பெற்றது. படம் முடிந்தபிறகு இரண்டு கார்களையும் பத்திரமாக திரும்ப ஒப்படைக்கப்பட்ட இந்த பிரத்யேக காரை அதன்பின் மூன்று பேர் வைத்திருந்திருக்கிறார்கள். கடைசியக ஒரு வெள்ளைக்கார சீமாட்டி இந்தக் காரை வைத்திருந்ததாக கேள்வி. வேண்டாம், அந்த கேள்விய மட்டும் கேக்காதீங்க, அது தப்பு. கார் மேட்டருக்கு திரும்ப வருவோம். அதன்பின், 35 வருடங்கள் ஒரு மியூசியத்தில் வைத்து பாதுகாக்கப்பட்ட இந்த கார் இப்போது ஏலத்திற்கு வருகிறது.

Aston Martin DB5

பிரபல கார் ஏல நிறுவனமான ஆர்.எம்.சோத்பீஸ்வசம் இருக்கும் DB5 கார், இந்திய மதிப்பில் குறைந்தது 40 கோடி ரூபாயைத் தாண்டி ஏலம்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூணு வருசத்துக்கு முந்தி வாங்குன காரே ஓட்டை ஒடைசலா கிடக்கு, கிட்டத்தட்ட 55 வருஷத்துக்கு முந்தி தயாரிக்கப்பட்ட காரை எவனாச்சும் வாங்குவானா என்றால், வாங்குவார்கள். ஏனெனில் இந்த DB5 கார் இன்னமும் பிரமதமாக வேலை செய்கிறது. பார்க்கவும் புத்தம் புதிய கார் போலவே இருக்கிறது. என்ன ஏலத்தில் பங்கெடுக்கிறீர்களா? நமக்கு ஓலா டேக்ஸி போதும்ங்க.

2018 TopTamilNews. All rights reserved.